முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் நெல்சன் நன்றி
ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் நெல்சன் நன்றி தெரிவித்துள்ளார்.


ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் நெல்சன் நன்றி தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அதிகாலைக் காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல்நாளில் தமிழகத்தில் ரூ.29.46 கோடியையும் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.12.04 கோடியையையும் கர்நாடகத்தில் ரூ.11.92 கோடி, கேரளத்தில் ரூ.5.38 கோடி, வெளிநாடுகளில் ரூ.32.75 கோடி என ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு உத்வேகம் அளிக்கும் வகையில் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி; உங்களது வார்த்தைகளால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...