முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

சிறகடிக்க ஆசை தொடர் படைத்த சாதனை!

கடந்த சில மாதங்களாக விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவில் பார்க்கப்படும் தொடர்களில் முதலிடத்தில் பாக்கியலட்சுமி தொடர் இருந்துவந்தது. 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2023, 11:52 am IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் முதன்மை டிஆர்பி பெற்ற தொடர் என்ற சிறப்பை சிறகடிக்க ஆசை தொடர் கைப்பற்றியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடர் முதன்மை தொடராக இருந்துவந்த நிலையில், தற்போது அதிக டிஆர்பி பெற்று சிறகடிக்க ஆசை முதன்மை வகிக்கிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. இதனால், தொடர்களுக்கு சமூகவலைதளத்தில் தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

Story image

கடந்த சில மாதங்களாக விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவில் பார்க்கப்படும் தொடர்களில் முதலிடத்தில் பாக்கியலட்சுமி தொடர் இருந்துவந்தது. 

இந்நிலையி, இந்த வாரம் வெளியான டிஆர்பி பட்டியலில் பாக்கியலட்சுமி தொடரை சிறகடிக்க ஆசை தொடர் முந்தியுள்ளது.

சிறகடிக்க ஆசை தொடர் அதிக அளவாக டிஆர்பி பட்டியலில் 7.39 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பாக்கியலட்சுமி தொடர் 7.67 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதனால், பாக்கியலட்சுமி தொடரை முந்தியுள்ளது சிறகடிக்க ஆசை தொடர். 

சிறகடிக்க ஆசை தொடரில், கோமதி பிரியா, வெற்றி வசந்த் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். குரு சம்பத்குமார் திரைக்கதை எழுத எஸ். குமரன் இயக்குகிறார். இந்தத் தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.