ஜவான் திரைப்படத்தின் 2ஆவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை உரிமத்தை டீ - சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் ஜவான் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதையும் படிக்க | ரம்யா பாண்டியனின் சகோதரியை கரம்பிடிக்கும் அசோக் செல்வன்!
இந்த நிலையில் படத்தின் 'ஹய்யோடா' என்கிற 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் மற்றும் பிரியா மாலி பாடியுள்ளனர்.
முன்னதாக இப்படத்தில் இருந்து முதல் பாடலாக அனிருத் பாடிய பாடல் கடந்த 31ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்திய ரசிகர்களுக்கு பயத்தைக் காண்பித்த ஜேக்கப் பெத்தெல்..! 22 வயதில் வரலாற்றுச் சாதனை!

ஆலங்குடி குருபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!

கும்பத்திலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்!

ஆட்ட நாயகன் விருதை பும்ராவுக்கு சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

