இடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

நடிப்பில் அசத்தும் வின்சி அலோஷியஸ்!

மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

Published On :

நல்ல நடிகைகளை தொடர்ந்து அடையாளப்படுத்தி வரும் மலையாள சினிமாவில் தற்போது புதிய வரவாக வந்திருக்கிறார் நடிகை வின்சி அலோஷியஸ்(27).

விக்ருதியில் அறிமுகமான வின்சி, ‘கனகம் காமினி கழகம்’, ‘பீமாவிண்டே வழி’, ‘1744 வயிட் ஆல்டோ’, ‘ரேகா’, ‘பத்மினி’ உள்பட 10க்கும் குறைவான படங்களே நடித்திருக்கிறார். 

ஆனால், ஆச்சரியப்படும் வகையில் இயக்குநர்களின் நாயகியாக கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தன் நடிப்பால் தத்ரூபமாக திரைக்குக் கடத்தி மாலிவுட் சினிமாவுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். 

சாதாரண குடும்பப் பெண்ணாக வரும் காட்சியானாலும் சரி, திடீரென ஆத்திரத்திற்கு உள்ளாகும் வன்முறைப் பெண்ணானலும் சரி எந்த சாயலும் இல்லாத நடிப்பை வினிசியால் வழங்கமுடிகிறது.

Story image

நிறத்தைத் தவிர கவர்ச்சி நாயகிகளுக்கு உண்டான எந்த அம்சமும் இல்லாதவர். ஆனால், தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு எதிர்பார்க்காத அளவிற்கு பாவனைகளின் மூலம் உயிரூட்டி விடுகிறார்.  

இவர் நாயகியாக நடித்த ‘ரேகா’ படத்தின் முதல்பாதிக்கு இரண்டாம் பாதிக்குமான நடிப்பே இவரின் திறனை அடையாளப்படுத்தியுள்ளது. இப்படத்திற்காக 2022 ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான கேரள அரசின் மாநில விருதை வென்றிருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘பத்மினி’ படத்திலும் வின்சி தன் நகைச்சுவை உடல்மொழியால் தனித்துத் தெரிகிறார். தேசிய விருது வாங்கினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்கிற நிலையில்தான் ஒவ்வொரு ஃபிரேமிலும் வின்சி நடித்துத்தள்ளிக் கொண்டிருக்கிறார்!  

நட்சத்திர நாயகர்களைச் சுற்றி வட்டமிட்டிருக்கும் இன்றைய கமர்சியல் சினிமாக்களில் கலை என்கிற பேச்சுக்கு துளியும் இடமிருப்பதில்லை. தப்பிப் பிழைக்கும் சில நல்ல படங்களும் பெரும்பாலும் நாயகர்களுக்கோ அல்லது இயக்குநருக்கோ பெயரைப் பெற்றுத் தருகிறது.

Story image

ஆனால், அப்படங்களில் இடம்பெறும் துணை நடிகர்கள், துணை நாயகிகள் அடுத்தப்படம் கிடைத்தால் போதும் என்கிற நிலையிலேயே இருக்கிறார்கள். 

மலையாளத்தில் அப்படியான துணை நடிகைகளிலிருந்து மேலேறிய நிமிஷா சஜயன், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் வரிசையில் வின்சி அலோஷியஸ் இடம்பெற்றிருக்கிறார். அவர்களைவிட நடிப்பாற்றல் மிக்க நாயகியாக வரும் அளவிற்கு திறமையையும் வைத்திருக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.