தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விஜய் 68: யுவனுடன் களமிறங்கும் தமன்!

நடிகர் விஜய்யின் 68-வது படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து தமன் பணிபுரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
இசையமைப்பாளர் தமன்
Updated On :21 ஆகஸ்ட் 2023, 2:21 am

DIN

நடிகர் விஜய்யின் 68-வது படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து தமன் பணிபுரியவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்திற்குப் பின்,  விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், நாயகியாக ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் இசையமைப்பாளர் தமன் நேற்று புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் பாடிய பிறகு பேசிய தமன், “என் வாழ்க்கையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இருவரிடம் மட்டுமே இணைந்து ப்ரோகிராமராக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளேன். விரைவில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படத்துக்கு ப்ரோகிராமராக பணியாற்றவுள்ளேன்.” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா, வெங்கட் பிரபு இயக்கும் விஜய் படமா எனக் கேள்வி எழுப்ப, தற்போது ஏதும் சொல்ல முடியாது என்று தமன் கூறிவிட்டார்.

இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.