செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மதுரை.. மலேசியா... எங்கே லியோ இசைவெளியீட்டு விழா?

லியோ இசைவெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2023, 11:52 am

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில்  இருக்கிறது.

சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா முதலில் மதுரையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியானது. பின், மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டனர். ஆனால், சில காரணங்களால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. 

இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ இசைவெளியீட்டு விழாவை செப்டம்பர் இறுதிவாரத்தில் நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.