

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தில் விஜய் இரட்டை சகோதரர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: காந்தாரா - 2 பட்ஜெட் இவ்வளவா?
மேலும், நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதைத் தொடர்ந்து, ‘டெஸ்ட் போட்டோஷூட்’ அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் அரசியல் கதையை பின்னணியாகக் கொண்டு உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தில் மத அரசியலைப் பேசி வெங்கட் பிரபு பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.