புது தில்லி: மத்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக மாதவன் இயக்கி, நடித்த ராக்கெட்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புது தில்லியில் இன்று 2021ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.
அதில், சிறந்த படமாக ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் தேர்வாகியுள்ளது. திரைப்படத் துறையில் பணியாற்றும் எவர் ஒருவரின் கனவாகவும் இருப்பது தேசிய விருதுகள்தான்.
இந்திய விண்வெளி துறையின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நடிகர் மாதவன் இயக்கி, நடித்த படமான ராக்கெட்ரி சிறந்த திரைப்பட விருது வென்றிருக்கிறது.
நடிகர் மாதவன் இயக்கிய முதல் படத்துக்கே தேசிய விருது கிடைத்திருப்பது அவருக்கு அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்த் திரைத்துறையில், இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி திரைப்படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. மொழி வாரியான திரைப்படத்தில் சிறந்த தமிழ் திரைப்பட விருதும், இப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர் - நடிகை
சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது, ஆலியா பட், சீர்த்தி சனோனுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.