தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

கடலூர்: வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா!

திருவதிகையில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருவாசக சித்தர் திருக்கழுக்குன்றம் சிவ தாமோதரன் தலைமையில் நடந்த திருவசாக முற்றோதல் நிகழ்ச்சி.

Updated On :6 பிப்ரவரி 2024, 6:39 pm IST

நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புகழ் பெற்ற இக்கோயிலில் திருவாசக முற்றோதல் பெருவிழா 27}ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.இதையொட்டி, கடந்த புதன்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவ பக்தர்கள்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவ பக்தர்கள்.

இதையடுத்து திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் திருவாசக முற்றோதல் பெருவிழா தொடங்கியது. திருவாசக சித்தர் திருக்கழுக்குன்றம் சிவ தாமோதரன் கலந்து கொண்டு திருவாசக பன்னிசைத்து திருவாசக முற்றோதலை தலைமையேற்று நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று திருவசாகம் முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியில் பண்ருட்டியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவதிகை திலகவதியார் திருநாவுக்கரசர் இறைபணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.