புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்: நடிகை ஷீலா அறிவிப்பு!

ஜிகர்தண்டா பட நடிகை ஷீலா ராஜ்குமார் தான் திருமண உறவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

News image
Updated On :2 டிசம்பர் 2023, 7:04 am

DIN

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் 2016இல் வெளியான ஆறாவது சினம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் 2017இல் ‘டுலெட்’ படம்தான் ஷீலா ராஜ்குமாரின் முழுமையான முதல் படம்.

Story image

இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்படது. பின்னர் மண்டேலா, திரௌபதி, நூடுல்ஸ், பிச்சைக்காரன் 2 படங்களிலும் நடித்துள்ளார். மண்டேலா மிகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.  

Story image

பெரிதும் வரவேற்பு பெற்ற மலையாளப் படமான கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் நடித்திருந்தார். தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ள ஷீலா ராஜ்குமார் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Story image

இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில், “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும் சோழன் வாலறிவன்” எனப் பதிவிட்டுள்ளார். 

Story image

சாதியப் படமான திரௌபதியில் தான் நடிக்கும்போது அந்தப் படத்தின் அரசியல் தெரியாது. இனிமேல் இதுப் போன்ற படங்களில் நடிக்க மாட்டேன் எனக் கூறி வைரலானதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.