2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

நடிகர் சசிகுமாரின் ‘நா நா’ ரிலீஸ் தேதி!  

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நா நா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Published On :



கல்பதரு பிக்சர்ஸ் பி.கே. ராம் மோகன் வழங்கும் இயக்குநர் என்.வி. நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள படத்துக்கு 'நா நா' எனப் பெயரிட்டுள்ளனர். 

சலீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர்  என்.வி. நிர்மல் குமார் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். 

Story image

பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் தங்களை நிரூபித்த நடிகர்கள் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவருக்கும் சினிமாவில் இது ஒரு சிறந்த கால கட்டமாக இருக்கிறது. ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரமாண்டமான வெற்றியை சசிகுமாரும்,  ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘போர் தோழில்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அமோக வெற்றியை சரத்குமாரும் பெற்றுள்ளார். 

Story image

இருவரும் தற்போது  கல்பதரு பிக்சர்ஸ் பி கே. ராம் மோகன் தயாரிப்பில், என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் 'நா நா' படத்திற்காக இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 15, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Story image

2023-ஆம் ஆண்டில் சசிகுமார் மற்றும் சரத்குமார் இருவரும் தங்கள் சிறந்த நடிப்பைக் கொடுத்து, வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஹர்ஷ வர்தன் ரமேஷ்வர் படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன்-த்ரில்லர் படத்தினை விரும்புவோருக்கு இது ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளார்கள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதை பார்வையாளர்களை ஈர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.