மின்சாரமில்லை; சிக்னலுமில்லை: உதவும்படி புகைப்படம் பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால்! 

மின்சாரமில்லை; சிக்னலுமில்லை: உதவும்படி புகைப்படம் பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால்! 

நடிகர் விஷ்ணு விஷால் தனக்கும் தன்னை சுற்றியுள்ள மக்களுக்கும் உதவி தேவையென எக்ஸில் பதிவிட்டுள்ளார். 

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான, ‘எஃப்ஐஆர்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 

தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. 

மிக்ஜம் புயலால் 2 நாள்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னையின் பலப்பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் சென்னை மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தனது பிறந்தநாளில் மற்றவர்களுக்கு உதவ, நற்பணி மன்றம் துவங்கியதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தனது வீட்டின் மொட்டைமாடியில் இருந்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “எனது வீட்டில் தண்ணீர் புகுந்தது. காரப்பாக்கத்தில் தண்ணீரின் அளவு மோசமாக மிகுந்து வருகிறது. உதவிக்காக தொடர்பு கொண்டுள்ளேன். மின்சாரமில்லை, செல்போனில் சிக்னலுமில்லை, வைஃபையும் இல்லை; எதுவுமில்லை. மொட்டை மாடியில் மட்டும் சில இடங்களில் சிறிது சிக்னல் கிடைக்கிறது. எனக்கும், இங்குள்ள என்னை போன்றவருக்கும் உதவி கிடைக்குமென நம்புகிறேன். சென்னையில் உள்ள மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. தைரியமாக இருங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com