2018-ல் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு, பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
சமீபத்தில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: ‘தவறான நிர்வாகமே காரணம்..’: சந்தோஷ் நாராயணன்
இதைத் தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்த படம் 'பார்க்கிங்'. நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்தை வழங்கியுள்ளார் ஹரிஷ் கல்யாண்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.