தமிழ்நாட்டில், மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் தொடர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. நவம்பர் கடைசி வாரம் முதல், டிசம்பர் முதல் வாரம் வரையிலான நாள்களில் ஒளிபரப்பான காட்சிகளின் ( எபிஸோடுகளின்) அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இல்லம்தோறும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் ஆதவராவால், தொலைக்காட்சித் தொடர்கள் அதிக அளவிலான டிஆர்பி புள்ளிகளைப் பெறுகின்றன.
முதல் 20 இடங்களில் உள்ள தொடர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், 10வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் உள்ளது. இந்தத் தொடர் 6.12 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.
9வது இடத்தில் ஆஹா கல்யாணம் தொடர் உள்ளது. இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இத்தொடர் 6.97 டிஆர்பி பெற்றுள்ளது.
8வது இடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. இந்தத் தொடர் 6.97 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரை குமரன் இயக்குகிறார். இதுவும் விஜய் தொலைக்காட்சித் தொடராகும்.
7வது இடத்தில் ஆனந்தராகம் தொடர் உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரில் அனுஷா பிரதாப் நாயகியாக நடிக்கிறார். இத்தொடர் 7.32 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.
6வது இடத்தில் இனியா தொடர் உள்ளது. ஆல்யா மானசா நாயகியாக நடிக்கும் இந்தத் தொடர் 7.45 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.
5வது இடத்தில் சுந்தரி சீரியல் உள்ளது. கேப்ரியல்லா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்தத் தொடரின் 2வது சீசனும் டிஆர்பியில் அதிக புள்ளிகளைப் பெற்று வருகிறது. சுந்தரி -2 தொடர் 7.45 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
4வது இடத்தில் எதிர்நீச்சல் தொடர் உள்ளது. திருச்செல்வம் இயக்கும் இந்தத் தொடர் முதலிடத்தில் இருந்துவந்தது. தற்போது 9.79 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
3வது இடத்தில் வானத்தைப்போல தொடர் உள்ளது. கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் இருந்துவந்த நிலையில், தற்போது பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தொடர் 9.76 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
2வது இடத்தில் கயல் தொடர் உள்ளது. சைத்ரா ரெட்டி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் கயல் தொடர் 10.23 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.
முதலிடத்தில் சிங்கப்பெண்ணே தொடர் உள்ளது. இயக்குநர் தனுஷ் இயக்கும் இந்தத் தொடரில் மணிஷா நாயகியாக நடிக்கிறார். இந்தத் தொடர் 10.28 புள்ளிகளைப் பெற்றுள்ளது.