மிஸ்டர் மனைவி தொடரில் நடிகை ஸ்மிருதி காஷ்யப் நடிக்கவுள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர்.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு மிஸ்டர் மனைவி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்ணுக்கும் வீட்டில் சமையல் செய்து குடும்பத்தைப் பேண நினைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமண வாழ்க்கையே மிஸ்டர் மனைவி தொடரின் கதையாகும்.
இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிகை ஷபானா நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றி அடைந்த செம்பருத்தி தொடரில் ஷபானா நடித்திருந்தார். அதன்மூலம் கிடைத்த பலதரப்பட்ட ரசிகர்களால் மிஸ்டர் மனைவி தொடருக்கும் ஏராளமான பார்வையாளர்கள் உண்டு.
படிக்க | தமிழ்நாட்டின் டாப் 10 சீரியல்கள்!

ஸ்மிருதி காஷ்யப்
தற்போது மிஸ்டர் மனைவி தொடரில் நடிகை ஸ்மிருதி காஷ்யப் நடிக்கவுள்ளார். மிஸ்டர் மனைவி தொடரில் முக்கிய பாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும், பலரைக் கவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத் தொடர்களில் ஸ்மிருதி காஷ்யப்
ரோஜா தொடரில் அழுத்தமான துணை பாத்திரத்தில் ஸ்மிருதி காஷ்யப் நடித்திருந்தார். மிஸ்டர் மனைவி தொடரில் கிடைத்த வாய்ப்புக்காக ஸ்மிருதிக்கு அவரின் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



