சின்னத்திரையில் இரு தொடர்கள் இன்று ஓராண்டு பயணத்தை நிறைவு செய்கின்றன.
மாதந்தோறும் புதிய தொடர்கள் அறிமுகமாகிவரும் நிலையில், ஓராண்டாக டிஆர்பி பட்டியலிலும் குறிப்பிடத்தகுந்த இடங்களைப் பெற்று ஓராண்டை இந்த இரு தொடர்களும் நிறைவு செய்துள்ளன.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மாலை நேரத் தொடர்களில் ஒன்று இனியா. இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒன்றாக இடம்பிடித்துவிடுகிறது.
படிக்க | தமிழ்நாட்டின் டாப் 10 சீரியல்கள்!
ராஜா ராணி தொடரில் நடித்து புகழ் பெற்ற ஆல்யா மானசா இந்தத் தொடரில் நடித்து வருகிறார். இதனால் ஆரம்பம் முதலே இந்தத் தொடருக்கு ரசிகர்கள் அதிகம்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, தற்போது வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
இடையிடையே புரட்சிகர காட்சிகள் வைத்து சமூக வலைதளங்களில் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்த காட்சிகளும் இனியா தொடரில் உண்டு. இதனால் சின்னத்திரை தொடர்களை பார்க்காதவர்களும் இனியா தொடரைப் பற்றி அறியும் சூழல் ஏற்பட்டது.
இதேபோன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் தொடரும் ஓராண்டை நிறைவு செய்கிறது. செம்பருத்தி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர் கார்த்திக் நடிப்பதால், கார்த்திகை தீபம் தொடருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் அதிகம்.
இந்தத் தொடரில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆர்த்திகா நடித்து வருகிறார்.
பெங்காலி மொழியில் ஒளிபரப்பான ’கிருஷ்ணா கோலி’ என்ற தொடரைத் தழுவி 'கார்த்திகை தீபம்' எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் கடந்த் ஆண்டு டிசம்பர் 5 முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
வெற்றிகரமாக தனது ஓராண்டு பயணத்தையும் நிறைவு செய்துள்ளது. இந்த இரு தொடர்களுமே டிஆர்பி பட்டியலிலும் குறிப்பிடத்தகுந்த இடங்களைப் பெறுகின்றன.