அனைத்து புயலினாலும் பாதிக்கப்படும் பாறை ‘கீதாஞ்சலி’: ராஷ்மிகாவின் வைரல் பதிவு!

அனிமல் படத்தில் கீதாஞ்சலி கதாபாத்திரம் குறித்து ராஷ்மிகா பதிவிட்ட பதிவு வைரலாகியுள்ளது.  
அனைத்து புயலினாலும் பாதிக்கப்படும் பாறை  ‘கீதாஞ்சலி’: ராஷ்மிகாவின் வைரல் பதிவு!

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. கீதாஞ்சலி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார் ராஷ்மிகா.

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் வசூலில் ரூ.600 கோடியை தாண்டியுள்ளது. 

இந்நிலையில் ராஷ்மிகா தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது: 

கீதாஞ்சலி: 

ஒரே வாக்கியத்தில் சொல்லவேண்டுமானால் குடும்பத்தின் ஒன்றாக வைக்கும் ஒரே ஆற்றல் அவள்தான். அவள் தூய்மையானவள், நிஜமனாவள், வடிக்கட்டப்படாதவள், வலுவானவள் மற்றும் இயற்கையானவள். படப்பிடிப்பின்போது நடிகையாக எனக்கு அவளது சில செயல்கள் மீது கேள்விகள் எழுந்தன. அப்போது இயக்குநர் கூறியது (அது அவர்களது கதை) நினைவுக்கு வந்தது. ரன்விஜய், கீதாஞ்சலி. இது அவர்களின் காதல், அவர்களது குடும்பம் குறித்த படம். அவர்கள் அப்படிதான். 

தாங்கமுடியாத வலி, வன்முறையான உலகத்தில் கீதாஞ்சலி அமைதியை கொண்டு வருகிறாள். அவளது கணவனையும் குழந்தைகளையும் பாதுகாக்க கடவுளை வேண்டுவாள். அனைத்து புயலினாலும் பாதிக்கப்படும் பாறை அவள். 

அவளது குடும்பத்துக்காக எதையும் செய்யக்கூடியவள். எனது கண்களுக்கு கீதாஞ்சலி முகவும் அழகாக தெரிகிறாள்; வலுவாக நின்று பெரும்பான்மையான பெண்ணைப்போல குடும்பத்தினை உள்ளும் புறமுமாக இரவுபகலாக காப்பவள் அவளே. 

அனைவரது அன்புக்கும் நன்றி. இந்த அன்புதான் என்னை அடுத்தடுத்த படங்களில் கடினமாக உழைக்க வைக்கிறது. அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியும் தழுவழும்!. எனப் பதிவிட்டுள்ளார். 

எக்ஸில் இந்தப் பதிவு 28ஆயிரம் லைக், 1.7ஆயிரம் ரீபோஸ்ட் செய்யப்பட்டுள்ளது. 780 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பெண்களை தவறாக சித்தரித்த படம் என்று விமர்சிப்பவர்களுக்கு ராஷ்மிகாவின் பதிவு சிறந்த பதிலடியாக இருப்பதாக அனிமல் பட ரசிகர்கள் கமெண்டுகளில் கருத்து தெரிவிக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com