தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரஜினி - 170 படத்தின் பெயர் இதுவா?

நடிகர் ரஜினிகாந்த் - ஞானவேல் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2023, 6:55 am

DIN

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை - அனிருத்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று ரஜினியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பெயரை அறிவிக்க உள்ளனர். இதற்கிடையே, நடிகர் ரஜினிக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இப்படத்திற்கு ‘வேட்டையன்’ எனப் பெயரிட்டுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் ரஜினி அர்ஜுனன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.