சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் புதிய தோற்றம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  

News image
Updated On :16 டிசம்பர் 2023, 2:35 pm

DIN

சிவகார்த்திகேயனின் புதிய தோற்றம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான மாவீரன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'எஸ்.கே 21' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். 
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். 
க்ளீன் ஷேவ் செய்து இளமைத் தோற்றத்தில் அவர் காணப்படுகிறார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.