எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சண்டக்கோழி 18 ஆண்டு நிறைவு: விஷால் நெகிழ்ச்சி

சண்டக்கோழி படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆனதையொட்டி, படத்தின் நாயகன் விஷால்  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

News image
Updated On :16 டிசம்பர் 2023, 6:07 pm

DIN

சண்டக்கோழி படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆனதையொட்டி, படத்தின் நாயகன் விஷால்  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

விஷாலுக்கு திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கிய இந்த படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  படத்தில் விஷாலுக்கு இணையாக ராஜ்கிரண் நடிப்பும் பேசப்பட்டது. மேலும் நாயகி மீரா ஜாஸ்மினின் குறும்புத்தனமும் யுவன் ஷங்கர் ராஜாவின் துள்ளலான இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  

சண்டக்கோழி படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதனை முன்னிட்டு, படத்தின் நாயகன் விஷால்  தனது இன்ஸ்டாவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில்,  18 ஆண்டுகளுக்கு முன்பு சண்டக்கோழி என்ற மாயாஜாலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக என் வாழ்க்கையை உருவாக்கிய இந்த நாளில் நான் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 

மேலும் என்னை நம்பிய என் பெற்றோர், என் இயக்குநர் லிங்கு (சாமி), அவர்களின் வரிசையில் மேலே உள்ள கடவுளுக்கும் (சாமி) நான் வணங்கி நன்றி கூறுகிறேன். 

இறுதியாக உலகளவில் பார்வையாளர்கள் வடிவில் திரையரங்குகளில் நான் பார்க்கும் கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். எனது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் ஆகியோரின் இந்த கனவை தொடருவேன். நன்றி மட்டும் போதாது என்பது எனக்குத் தெரியும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.