மறுமணம் எப்போது?: நடிகை சமந்தா அதிரடி பதில்!

மறுமணம் எப்போது என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார் நடிகை சமந்தா. 
மறுமணம் எப்போது?: நடிகை சமந்தா அதிரடி பதில்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த குஷி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. 

சமந்தா 2 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த சமந்தா 2021-ல் விவாகரத்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மறுமணம் எப்போது என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார் நடிகை சமந்தா. 

அதில், “மறுமணம் ஒரு தவறான முடிவாகிவிடுமென புள்ளி விவரங்கள் காட்டுகின்றன” என பதிலளித்தார். அத்துடன் ஒரு நகைச்சுவை எமோஜி பதிவிட்ட சமந்தா 2023இல் விவாகரத்து புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். 

அதில் முதல் திருமணமானவர்கள் 50 சதவிகிதம் அளவுக்கும் 2வது, 3வது முறையே மறுமணம் செய்பவர்கள் 67 சதவிகிதம், 73 சதவிகிதம் அளவுக்கும் விவாகரத்து ஏற்படுவதாக புள்ளிவிவரங்களை பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com