2023-ல் 220 மலையாளப் படங்கள்!
இந்தாண்டு வெளியான மலையாளத் திரைப்படங்கள் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.


தென்னிந்திய சினிமாக்களில் சமீப காலமாக மலையாளத் திரைப்படங்களின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஆண்டுக்கு 200 படங்களுக்கு மேல் வெளியாகிறது. மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அதிகபட்சம் நூறு திரைப்படங்களே உருவாகிக்கொண்டிருந்தன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமா வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாக இந்திய அளவில் கவனம் பெற்ற மலையாள சினிமா தற்போது வசூல்களிலும் தடம் பதித்து வருகிறது.
குறிப்பாக, இந்தாண்டு டிச.8 ஆம் தேதி வரை வெளியான 209 படங்களில் 13 திரைப்படங்களே வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மம்மூட்டியின் கண்ணூர் ஸ்குவாட், ஜூட் ஆண்டனியின் 2018, ஆர்டிஎக்ஸ், ரோமாஞ்சம், மாலிக்கபுரம் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பாளருக்கு லாபத்தைக் கொடுத்ததுடன் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியத்தையும் அளித்தன.
இதையும் படிக்க: ஆஸ்கருக்குத் தேர்வானது ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்!
மேலும், இம்மாத இறுதிக்குள் மோகன் லால் இயக்குநர் ஜித்து ஜோசப் கூட்டணியில் உருவான ‘நேரு’ உள்பட 11 படங்கள் திரைக்கு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...