தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விசித்ராவுக்கு ஆதரவாக ரச்சிதா மகாலட்சுமியின் வைரல் பதிவு!

பிக் பாஸ் போட்டியாளர் விசித்ராவுக்கு ஆதரவாக நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

News image
Updated On :20 டிசம்பர் 2023, 8:00 am

DIN

பிக் பாஸ் போட்டியாளர் விசித்ராவுக்கு ஆதரவாக நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.  இவர் சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதன்பின், விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் மற்றும் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும், வெள்ளித் திரையிலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதா, அந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகமான ரசிகர்களைப் பெற்றார்.

Story image

நடிகர் தினேஷை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். 

தற்போது, தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் அதிமாக விசித்ரா மற்றும் தினேஷுக்கு இடையே சண்டை நிலவி வருகிறது. 

இந்த நிலையில், ரச்சிதா மகாலட்சுமி அவரது இண்டாகிராம் பக்கத்தில் விசித்ரா ஆதரவாக சிங்கப் பெண்ணே பாடலை பதிவிட்டு 'தி ஃபைட்டர்' என பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் தினேஷ் மற்றும் விசித்ராவுக்கு இடையேயான மோதலில் ரச்சிதா, விசித்ராவுக்கு ஆதரவாக இருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.