கொடைக்கானலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்தனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகம் கடந்த அக்.30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக எடுக்கப்பட்டது. ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ம் பாகம் தந்தை - மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தில் மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலின், கண்டிப்பான தந்தையாக 2ஆம் பாகத்தில் தொடர்ந்து நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனம் கதாபாத்திரத்தில் நிரோஷா நடிக்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த மீனா கதாபாத்திரத்தில் ஹேமா ராஜ் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக செந்தில் கதாபாத்திரத்தில் வசந்த் நடிக்கிறார்.
சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், குடும்பத்துடன் ஹனிமூன் செல்லும் காட்சிகள் கொடைக்கானலில் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்த வார டாப் 10 தொடர்களின் டிஆர்பி பட்டியல்!
இந்த நிலையில், கொடைக்கானலில் எடுத்த புகைப்படங்களை நடிகர் வசந்த் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இப்புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் பிடிபட்ட புலிக் குட்டி உயிரிழப்பு

கிரெசன்ட் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்

லவ்டேல் லாரன்ஸ் பள்ளியின் 168-ஆவது நிறுவனா் தின விழா

சுவா் ஏறிக் குதித்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


