காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கும் 3வது படத்தின் தலைப்பு

நடிகர் தனுஷ் தான் இயக்கும் 3வது படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என  தலைப்பு வைத்துள்ளார்.

News image
Updated On :25 டிசம்பர் 2023, 5:26 am

DIN

நடிகர் தனுஷ் தான் இயக்கும் 3வது படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என  தலைப்பு வைத்துள்ளார்.
கோலிவுட்டில் நடிப்பு, தயாரிப்பு, இயக்குநர் என பிஸியாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது அவர் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடித்து முடிதுதுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து மற்றுமொரு படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார். ஆனால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. 
தன்னுடைய அக்கா மகனை நாயகனாக்கி படத்தை இயக்கி வருகிறார். படத்தில் கௌரவ தோற்றத்தில் மட்டும் தனுஷ் நடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் தலைப்பை விடியோ ஒன்றினை வெளியிட்டு நடிகர் தனுஷ்  அறிவித்துள்ளார். 
அதில்  படத்தின் தலைப்பாக “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற பழைய பாடல் வரி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ‘வழக்கமான காதல் கதை’ என்று சப் டைட்டிலாகவும் வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில் டீனேஜ் பருவ காதலை மையமாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.