மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வாடிவாசல் - ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.

News image
Updated On :26 டிசம்பர் 2023, 6:34 am

நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.

சில மாதங்களுக்கு முன், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருகிறது.

கங்குவாக்குப் பின் சுதா கொங்காரா படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். சமீபத்தில், நேர்காணலில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், “விடுதலை இரண்டாம் பாகத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது முடிந்ததுமே மிக விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், “ வாடிவாசல் படத்திற்கான இசை தயார் நிலையில் உள்ளது.இயக்குநர் வெற்றிமாறனின் தற்போதைய படப்பணிகள் முடிந்ததும் வாடிவாசல் ஆரம்பமாகும். உங்களைப்போல் நானும் ஆர்வத்தில்தான் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

வாடிவாசலுக்கான பின்னணி இசை, பாடலுக்கான இசை எல்லாம் தயாராக உள்ளதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.