நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சலார் ரூ.500 கோடி வசூல்!

பிரபாஸ் நடிப்பில் உருவான சலார் திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2023, 11:38 am

DIN

கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சலார் திரைப்படம் டிச.22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.  தமிழகத்தில் பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சலார் திரைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இப்படம் முதல்நாளில் உலகளவில் ரூ.178.7 கோடி வசூலித்து 2023ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே முதல்நாள் வசூலில் முதலிடம் பெற்று அசத்தியது. 

இந்நிலையில், இப்படம் ரூ.500 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.