தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விஜயகாந்த் மறைவுக்கு மம்மூட்டி, மோகன்லால் இரங்கல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2023, 9:55 am

DIN

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களும் விஜயகாந்த் மறைக்கு வருத்தத்தைப் பதிவிட்டுள்ளனர். 

முக்கியமாக, பல துணை நடிகர்கள் நேரில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் உருக்கமாக பேசி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் மம்மூட்டி “விஜயகாந்த் இனி நம்முடன் இல்லை. என் நல்ல நண்பராக இருந்தவர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதர். சினிமா விரும்பிகள், திரைத்துறையினர் உள்பட என்னாலும் இவரின் இழப்பு எத்தகையது என்பதை உணர முடிகிறது. அவரது குடும்பத்திற்கு என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

நடிகர் மோகன்லாலும் எக்ஸ் தளத்தில், “சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். " எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.