சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய், அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
விஜயகாந்த் உடல் கண்ணாடிப் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்ததைக் கண்டு, நடிகர் விஜய் சில நொடிகள் உடைந்து அழுதார். பின், அங்கிருந்து அவர் கிளம்பிச் செல்ல வெளியேறியபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜய் மீது காலணியை வீசினார்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது போலியாக இருக்கலாம் என ரசிகர்கள் விமர்சித்த நிலையில், விடியோவை எடுத்த செய்தி நிறுவனம் காலணி வீசப்பட்டது உண்மைதான் என விளக்கமளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.