ஹாய் நான்னா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
ஹாய் நான்னா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஹாய் நான்னா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடித்த 30-ஆவது படம் 'ஹாய் நான்னா'.
இவர் நடிப்பில் வெளியான 'ஜெர்ஸி', 'கேங் லீடர்', 'ஷ்யாம் சிங்கா ராய்' உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. தமிழில் வெளியான வெப்பம், நான் ஈ படங்களும் நல்ல ஆதரவு இருந்தது.
ஹாய் நான்னா சௌரவ் இயக்கியுள்ளார். மிருணாள் தாகூர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
இப்படம் டிச.7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடனம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
இதையும் படிக்க: கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்த நிலையில், 'ஹாய் நான்னா' திரைப்படம் வரும் ஜன. 4 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...