‘குரங்கு பொம்மை’ திரைப்பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ திரைப்பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படமானது முழுக்க முழுக்க க்ரைம் மற்றும் த்ரில்லர் களத்தைக் கொண்ட ஆக்ஷன் ட்ராமாவாக உருவாக உள்ளது.
‘குரங்கு பொம்மை’ படத்திற்கும் இசையமைத்த கன்னடத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான பி. அஜ்னீஷ் லோக்நாத் ‘காந்தாரா’ பட வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், தளபதி 67 ஆகிய திரைப்படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய ஃபிலோமின் ராஜ் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். ’லவ் டுடே’ மற்றும் ‘விலங்கு’ இணையத்தொடர் ஆகியவற்றில் பணியாற்றிய தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வகுமார் கலை இயக்குநராக இதில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. பெயரிடப்படாத இந்தப் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மொடக்குறிச்சி தொகுதியில் அமித் ஷா சாலைவலம்! | ADMK | BJP

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தலைமைப் பண்பில் அசத்தும் இஷான் கிஷன்..! புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்!

சென்னைக்கென தேர்தல் அறிக்கை! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்! | DMK
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

