கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் வெற்றிமாறன் படத்தை பரிந்துரைந்த ராஜமௌலி!

’தி நியூயார்க்கர்’ பத்திரிகைக்கு இயக்குநர் ராஜமௌலி வெற்றிமாறன் படத்தை பரிந்துரை செய்துள்ளார்.

News image
Updated On :17 பிப்ரவரி 2023, 12:36 pm

’தி நியூயார்க்கர்’ பத்திரிகைக்கு இயக்குநர் ராஜமௌலி வெற்றிமாறன் படத்தை பரிந்துரை செய்துள்ளார்.

இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது.

நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

மேலும், இந்தத் திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 5 பாடல்களில் ஒன்றாக நாட்டுக் கூத்து பாடலும் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது.

இந்நிலையில், ராஜமௌலி ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகைக்கு நீண்ட பேட்டியளித்துள்ளார். அதில், ’ஆர்ஆர்ஆர்' குறித்தும் சர்வதேச அங்கீகாரம் குறித்து விரிவாக கூறியிருக்கிறார். 

Story image

குறிப்பாக, தி நியூயார்க்கர் வாசகர்களுக்காக நீங்கள் பரிந்துரைக்கும் 5 முக்கியமான இந்தியத் திரைப்படங்கள் எவை? என்கிற கேள்விக்கு சங்கராபரணம், முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (தமிழில்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்), பண்டிட் குயின், பிளாக் ஃபரைடே, ஆடுகளம் உள்ளிட்ட படங்களை ராஜமௌலி பரிந்துரைத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்பட 6 தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.