பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

அதிகரிக்கும் காட்சிகள்: தொடரும் ‘பதான்’ டிக்கெட் கட்டண சலுகை!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்த பதான் படத்தின் டிக்கெட் கட்டண சலுகை மேலும் இரண்டு நாள்கள் தொடர்ந்துள்ளது. 

Published On :

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்த பதான் படத்தின் டிக்கெட் கட்டண சலுகை மேலும் இரண்டு நாள்களுக்குத் தொடர்ந்துள்ளது. 

பதான் படம் கடந்த மாதம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது. ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் இதுவரை மொத்தமாக ரூ. 981 கோடி வசூலித்துள்ளது. 

இந்தியாவில் மட்டும் ரூ. 508 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையை பதான் பெற்றுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய படம் - ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2. 

Story image

முன்னதாக, இந்தியாவின் முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளான பிவிஆர், ஐனாக்ஸ், இந்தியா சினிபோலிஸ் மற்றும் வேறு சில திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை மட்டும் ரூ. 110 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. 

இந்நிலையில், பதான் படத்துக்கு அதிகளவில் ரசிகர்கள் குவிந்து வருவதால் சனி, ஞாயிறு என மேலும் இரண்டு நாள்களுக்கு ரூ. 200 மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஷாருக் கானின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. 

இந்த டிக்கெட் சலுகையால் இந்தியா முழுக்க பதான் படத்துக்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் புதிய படங்கள் வெளியான பிறகும் பதான் படத்தின் வசூல் குறையாமல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.