அரண்மனையை போல் பிரம்மாண்ட வீட்டைக் கட்டி தனது பெற்றோருக்கு பரிசளித்துள்ளார் நடிகர் தனுஷ்.
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில் இடம் வாங்கிய நடிகர் தனுஷ் கடந்த 2021ஆம் ஆண்டு வீடு கட்ட அடிக்கல் நாட்டினார். இந்த வீட்டின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து சமீபத்தில் புதுமனை புகுவிழாவும் நடைபெற்றது.
சுமார் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் தனது பெற்றோர்களுடன் சமீபத்தில் தனுஷ் குடிபெயர்ந்தார்.
இந்நிலையில், இயக்குநரும் தனுஷ் ரசிகர் மன்ற தலைவருமான சுப்ரமணியன் சிவா, தனுஷ் வீட்டில் எடுத்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக தொடங்கியுள்ளது.
புதிதாக தனுஷ் கட்டியுள்ள வீட்டின் அருகில்தான் முன்னாள் மாமனாரும், சூப்பர் ஸ்டாருமான நடிகர் ரஜினியின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மிதுனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: ரிஷபம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மேஷம்

திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! - மு.க. ஸ்டாலின் அழைப்பு மடல்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

