லவ் டுடே: மேக்கிங் விடியோ வெளியானது!
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.


கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார்.
கடந்த நவ.4 ஆம் தேதி வெளியான இப்படம் அனைத்துத் தரப்பினரிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றது. காதலில் நம்பிக்கை எவ்வளவு முக்கியமானது என்பதைக் கருவாகக் கொண்டு உருவாகியிருந்தது.
இப்படத்தின் 100-வது வெற்றிவிழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்ததாகவும் தகவல் வெளியானதோடு ஹிந்தியில் விரைவில் ரீமேக் செய்யபட உள்ளதை இன்று தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது, இந்தப் படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றியையும் எப்படியெல்லாம் எடுத்தோம் என விளக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...