நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிப். 25-ல் முடிவுக்கு வருகிறது 'அபியும் நானும்' தொடர்!

கடந்த 2020 முதல் 'அபியும் நானும்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. குழந்தை நட்சத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு பெரியவர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் கவர்ந்துள்ளது. 

News image
Updated On :20 பிப்ரவரி 2023, 11:37 am

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அபியும் நானும்' தொடர் இந்த மாதத்துடன் முடிவடையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தொடரின் திரைக்கதை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் இந்த மாதத்துடன் முடிவடையவுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் கடந்த 2020 முதல் 'அபியும் நானும்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. குழந்தை நட்சத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த தொடர், பெரியவர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் கவர்ந்துள்ளது. 

ஆகாஷ், ரியா மனோஜ், வித்யா மோகன், பேபி நிதிஷ் உள்ளிட்டோர் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகின்றம்னர். மேலும், லதா சேதுபதி, யமுனா சின்னதுரை, கிரிஜா, ராஜ்கமல் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். 

Story image

குழந்தை நட்சத்திரங்களை மையப்படுத்தி அதிக காட்சிகள் இடம்பெறும் இந்த தொடர் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்த மாதம் 25ஆம் தேதியுடன் இந்த தொடர் முடிவடைய வாய்ப்புள்ளது.

'அபியும் நானும்' தொடரை எழுதி இயக்கியவர் நடராஜன். ஒளிப்பதிவு - ஆர்.பி.சத்தியமூர்த்தி, படத்தொகுப்பு - எம்.எஸ்.தியாகராஜன், எம்.பிரபாகரன், முருகேசன் கணேசன் உள்ளிட்டோர் செய்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.