காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

’கேப்டன் மில்லர்’ வெளியீடு எப்போது?

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 11:00 am

DIN

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். 

1930களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர்  உருவாகிவருகிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களான ராக்கி, சாணிக் காயிதம் படங்களைப் போல் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்சன் படமாக கேப்டன் மில்லர் இருக்கும் என கூறப்படுகிறது. 

சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், கேப்டன் மில்லரை இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாகக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.