காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தசரா படத்தின் ‘தீக்காரி’ மேக்கிங் விடியோ வெளியானது!

நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசரா படத்தின் தீக்காரி பாடலின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. 

Published On :

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. அவரது முந்தைய படமான ஷியாம் சிங்கா ராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து நானி 'தசரா' எனும் புதிய படத்தில் நடித்து வந்தார். இதன் முதல் பார்வை போஸ்டரில் நடிகை சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இருந்தது. அப்போதிலிருந்தே இந்தப் படத்திற்கான ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. சுதாகர் செருகுரி தயாரித்து உள்ளார்.

இதில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மாநகரம், கைதி புகழ் சத்தியன் சூர்யன். 


தற்போது, இந்தப் படத்தின் தீங்கிரை பாடலின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் ஏற்கனவே பிப்.15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

இத்திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 30ஆம் நாள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தியென பான் இந்தியப் படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.