தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மலைக்கோட்டை வாலிபன்: ராஜஸ்தான் கோட்டையில் பிரமாண்ட படப்பிடிப்பு?

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 3:36 pm

DIN

மலையாளத்தில் ஜல்லிக்கட்டு,அங்கமாலி டையரிஸ், சுருளி ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. 

தற்போது மோகன்லால் கமல்ஹாசனுடன் இணைந்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தினை இயக்கிவருகிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.  தீபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் சுஜித் சுதாகரன் இந்தப் படத்துக்கு காஷ்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். 

ஏற்கனவே இந்தப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக இருக்கும் நிலையில் நடிகர் ஜீவாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Story image

பிப்ரவரியில் மோகன்லாலுடன் நடிகர் கமல், ஜீவாவும் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது ராஜஸ்தான் பொக்ரானில் பிரமாண்டமாக படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு துணைநடிகர்கள் பங்கேற்றதாகவும் இந்தப் படப்பிடிப்பு மார்ச்.20 வரை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.