அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

கமல்ஹாசனின் 234வது படத்தில் த்ரிஷா? 

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 ஜனவரி 2023, 12:30 pm

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவருடைய அடுத்ததடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. மணிரத்னம் - கமல்ஹாசன் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது குறிப்பிடத்தக்கது.  

அதன்படி, கமல்ஹாசனின் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024ஆம் ஆண்டு படம் வெளியாகவிருக்கிறது. 

Story image

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மன்மதன் அம்பு, தூங்காவனம் படத்தில் நடித்துள்ளார். 3வது முறையாக ஜோடி சேர்வார் என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

தளபதி 67 படத்திலும், அடுத்த அஜித் படத்திலும் த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.