பெண்களைக் கிண்டலடித்த ரசிகருக்கு சமந்தா பதிலடி!
டிவிட்டரில் பெண்களைக் கிண்டலடித்த ரசிகருக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.


டிவிட்டரில் பெண்களைக் கிண்டலடித்த ரசிகருக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்னும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக, சினிமாவிலிருந்து தற்காலிக ஓய்வில் இருக்கிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில், டிவிட்டரில் ரசிகர் ஒருவர் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு வெளியான டிரைவர் ஜமுனா, கனெக்ட், ராங்கி, செம்பி படங்களின் போஸ்டர்கள் திரையரங்கம் ஒன்றில் அடுத்தடுத்தாக வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைப் பகிர்ந்து “தமிழ் சினிமா முன்னேற்றப் பாதையில் செல்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இதை நினைத்துப் பார்த்திருக்க முடியாது” எனப் பதிவிட்டிருந்தார்.
.jpg)
இதையும் படிக்க: ’அவதார் 2’ வசூல் இத்தனை கோடிகளா?
இதைப் பகிர்ந்த சமந்தா ‘பெண்கள் எழுச்சி பெறுகிறார்கள்’ எனக் குறிப்பிட்டார். அதற்கு மற்றொரு நபர் ‘எழுவது மீண்டும் விழுவதற்குத்தான்’ என பதிலளித்தார். அதைக் கண்ட சமந்தா ‘விழுந்து பின் மீண்டும் எழுவது மேலும் இனிமையாக்கும் நண்பரே’ என பதிலடி கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...