கலை இயக்குநர் சுனில் பாபு
கலை இயக்குநர் சுனில் பாபு

வாரிசு படத்தின் கலை இயக்குநர் மரணம்!

இந்திய சினிமாவில் பிரபல கலை இயக்குநர் சுனில் பாபு மாரடைப்பால் நேற்று இரவு உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

இந்திய சினிமாவில் பிரபல கலை இயக்குநர் சுனில் பாபு மாரடைப்பால் நேற்று இரவு உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த சுனில் பாபு(வயது 50) தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

எம்.எஸ்.தோனி, கஜினி, சீதா ராமம், பெங்களூர் டேஸ், துப்பாக்கி, பிரேமம் உள்பட 100 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள சுனில், இறுதியாக விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்திற்கு கலை இயக்குநராக பணிபுரிந்தார்.

இந்நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com