நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'இருள் ஆளப்போகிறது': டிமாண்டி காலனி 2 படத்தின் அறிமுக விடியோ!

'டிமாண்டி காலனி 2' படத்தின் நடிகர்களை அறிமுகப்படுத்தும் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :7 ஜனவரி 2023, 2:32 pm

DIN

'டிமாண்டி காலனி 2' படத்தின் நடிகர்களை அறிமுகப்படுத்தும் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து, அருள்நிதி - பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. படத்தின் 40 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், டிமாண்டி காலனி 2 படத்தின் நடிகர்களை அறிமுகப்படுத்தும் விடியோவை இருள் ஆளப்போகிறது என்ற தலைப்பில் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இத்துடன் ‘புனிதமற்ற பழிவாங்கல்’ டேக்கும் டிரெண்டாகி வருகின்றது.

தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.