தேசிய விருது பெற்ற இயக்குநர் படத்தில் விஜய் தேவரகொண்டா! 

பிரபல தெலுங்கு நடிகர்  விஜய் தேவரகொண்டாவின் 12வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 
தேசிய விருது பெற்ற இயக்குநர் படத்தில் விஜய் தேவரகொண்டா! 

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. இவரது 12வது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. நானி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 

நாக வம்சி, சாய் சௌஜான்யா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தினை கௌதம் தின்னானுரி இயக்குகிறார். தற்போது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் விஜய் தேவரகொண்டா காவலதிகாரியாக நடித்துள்ளார். இது அவர் கதாநாயகனாக நடிக்கும் 12வது படம் என்பதால் ‘விடி12’ என தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளது. 

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விஜய் தேவரகொண்டா, “இதனை கேட்கும்போது எனது இதயம் சிறிது தடுமாறியது. இந்தக் கதை. இந்தக் குழு. என்னுடைய அடுத்தது” என பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com