ஜெயிலர் படத்தில் இணையும் பாலிவுட் பிரபலம்?
சமீபத்தில் பிகில், ரெண்டகம் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார் ஜாக்கி ஷெராப்.


நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் - ஜெயிலர். ரஜினி, மோகன்லால், சிவ்ராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், வசந்த் ரவி போன்றோர் நடிக்கிறார்கள். இசை - அனிருத். முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்சனின் கோரிக்கையையடுத்து படத்தின் திரைக்கதையை ஜாக்கி ஷெராப் படித்து வருவதாகவும் தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்த பிறகு படத்தில் நடிப்பது பற்றிய முடிவைத் தெரிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் பிகில், ரெண்டகம் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார் ஜாக்கி ஷெராப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...