எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாவீரன் - சிறப்புத் தோற்றத்தில் பிரபல நடிகர்!

மாவீரன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பிரபல நடிகர் ஒருவர் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :5 ஜூலை 2023, 10:25 am

DIN

மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்படம் கண்டிப்பாக தனக்கு வெற்றிப்படமாக அமையும் என நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த நம்பிக்கையில் உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் பிரபல நடிகர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில், இது நடிகர் ரஜினியாக இருக்கும் என பலர் சமூக வலைதளங்களில் கருத்திட்டு வந்தனர்.

ஆனால், அவர் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், ஒரு பிரபலம் இருக்கிறார். இது யாராக இருக்கும் என்கிற ரகசியத்தை சிரத்தையுடன் காப்பாற்றி வருகின்றனர் படக்குழுவினர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.