சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

எந்தத் தொடர் வந்தாலும்... எதிர்நீச்சல் போல் வெற்றி பெற வாழ்த்துகள்!

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது எந்தத் தொடர் வந்தாலும் எதிர்நீச்சல் போல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

News image
Updated On :8 ஜூலை 2023, 9:12 am

DIN

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது எந்தத் தொடர் வந்தாலும் எதிர்நீச்சல் போல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் சின்னத் திரை தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளைஞர்களையும் பெருமளவு கவர்ந்து வருகிறது. 

இளந்தலைமுறை ரசிகளைக் கவரும் வகையிலான காட்சி அமைப்புகளைக் கொண்டு ஏராளமான சின்னத் திரை தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர் நீச்சல் தொடருக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

திருமணம் ஆன பிறகு மருமகள்களாக செல்லும் பெண்கள் படும் துயரங்களையே காட்டி வந்த சின்னத் திரை தொடர்களுக்கு மத்தியில், மருமகள்கள் மூலம் பழமைவாதங்களை தோலுரிக்கும் தொடராக எதிர்நீச்சல் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், இளைஞர்களும் இந்தத் தொடருக்கு ரசிகர்களாக உள்ளனர். 

Story image

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள கிழக்கு வாசல் என்ற புதிய தொடருக்கான புரோமோ வெளியானது. இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிழக்கு வாசல் முன்னோட்ட விடியோ வெளியானது.

Story image

கிழக்கு வாசல் தொடருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள், எதிர்நீச்சல் போல் வெற்றி பெற வாழ்த்துகள் என மேற்கோள் சுட்டிக்காட்டி கிழக்கு வாசலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Story image

ரசிகர்களின் இத்தகைய கருத்துகள் சமீபத்தில் அறிமுகமான பல தொடர்களுக்கும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.