லியோ திரைப்படத்தில் நான் இருக்கிறேனா என்று கேள்விக்கு நடிகர் அர்ஜுன் தாஸ் விளக்கமளித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அநீதி திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் தாஸ், “அநீதி படத்தில் பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் நிறைய கற்றுக் கொண்டேன். வசந்தபாலன் அழைத்த போது, வில்லன் கதாபாத்திரம் தான் தருவார் என நினைத்தேன். ஆனால் முக்கிய கதாபாத்திரம் என சொன்னதும், உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.
அவருடன் வேலை செய்ய வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. நான் எப்போதும் இயக்குநர்களிடம் சரணடைந்து விடுவேன். அவர்கள் சொல்லும்படி நான் நடிப்பேன். எனக்கு நீண்ட கால திட்டங்கள் இல்லை.
இதையும் படிக்க: மறுக்கப்பட்ட நீதியின் குரலை அநீதி படம் பேசும்: வசந்தபாலன்
லியோ திரைப்படத்தில் நான் இருக்கிறேனா, இல்லையா என பலரும் கேட்கிறார்கள். அது சர்ப்பரைசாக இருக்கட்டும். படம் வரும்போது தெரிந்து கொள்ளுங்கள். எனது குரலால் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. விஜய், அஜித், சூர்யா போன்றவர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” எனத் தெரிவித்தார்