மறுக்கப்பட்ட நீதியின் குரலை‌ அநீதி படம் பேசும்: வசந்தபாலன்

மறுக்கப்பட்ட நீதியின் குரலை‌ அநீதி படம் பேசும் என்று அப்படத்தின் இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
மறுக்கப்பட்ட நீதியின் குரலை‌ அநீதி படம் பேசும்: வசந்தபாலன்

மறுக்கப்பட்ட நீதியின் குரலை‌ அநீதி படம் பேசும் என்று அப்படத்தின் இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அநீதி திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது பேசிய இயக்குநர் வசந்தபாலன், "அநீதி திரைப்படத்தில் முதல் முறையாக அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷை பார்த்த போது, பெரிய இசையமைப்பாளர் வருவார் என நினைத்தேன். அதேபோல அர்ஜுன் தாஸ் பெரிய நடிகராக வருவார். இந்த கதையை எழுதி முடித்த போதே, இந்த கதாபாத்திரம் அர்ஜுன் தாஸ் செய்தால் சரியாக இருக்கும் என நினைத்தேன். காதல், சோகம், கண்ணீர் என பல இடங்களில் அழகாக அவர் நடித்துள்ளார். அவரது குரல் இந்த படத்தை தூக்கி நிறுத்தும். 

எளிய மனிதர்களின் மறுக்கப்பட்ட நீதியின் குரலை‌ அநீதி படம் பேசும். நான் எனது வழக்கமாக பாணியில் இருந்து மாறுபட்டு, திரில்லர் பாணியில் இப்படத்தை எடுத்துள்ளேன். 

டெலிவரி பாய் கதாப்பாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். நம்முடன் வேலை பார்ப்பவர்களிடம் சாப்பிட்டாயா என கேட்பது முக்கியம். அந்த சின்ன அன்பை தான் மனிதர்கள் எதிர்பார்ப்பார்ப்பார்கள். அத்தகைய அன்பை பேசும் படமாக அநீதி இருக்கும்.

சக மனிதனை மனிதனாக நடத்த வேண்டுமென்ற குரலை குரலை இப்படம் பேசும். அங்காடி தெரு படம் வேறு. அநீதி படம் வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. இது திரில்லரான வாழ்வியல் பதிவு. ஒடிடியில் வெளியிடப்படும் திரைப்படங்களில் வருமானத்தில் ஒரு பங்கை திரையரங்குகளை வழங்க வேண்டுமென கூறியது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் பதில் சொல்வார்கள்" எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com