திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

எல்ஜிஎம் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

எல்ஜிஎம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2023, 2:06 pm IST

எல்ஜிஎம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். ரோர் ஆஃப் தி லயன் என்கிற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படத்தையும் வுமன்ஸ் டே அவுட் என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள். 

சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க தோனியும், சாக்‌ஷியும் முடிவு செய்திருந்தனர் . 

அதன்படி, ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர். முன்னதாக, இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், எல்ஜிஎம் திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.